Take a fresh look at your lifestyle.

நுண்நிதி கடன் திட்டத்திற்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு பேரணி!

நுண்நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் சமுகங்களை பாதுகாக்கக்கும் நோக்கில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இன்று(14) காலை பத்து முப்பது மணிக்கு முல்லைத்தீவு நகர்பகுதியில் சுனாமி நினைவாலயம் முன்பாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மகயரும் கையளிக்கப்பட்டது

இந்த நுண்கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்திற்கும் மத்தியவங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக இந்த பேரணி முன்னெடுத்ததாக பேரணி ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

குறித்த பேரணியில் பல நூற்றுக்காணக்காண பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக மாவட்ட செயலகம் வரை சென்று மகயர் கையளித்ததோடு நிறைவடைந்தது

கடந்த சில ஆண்டுகளாக நுண்நிதி செயற்பாடுகளினால் நன்மைகளை அனுபவித்துவரும் எமது சமுதாயம் அதற்கு நிகரான சவால்களை சந்தித்துகொண்டிருக்கின்றனர் குறிப்பாக பெண்கள் கடன் சுமைகளை தாங்கமுடியாது போகுமிடத்து தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை போராட்ட காரர்களால் Hon. Dr. Indrajit Coomaraswamy Governor Central Bank of Srilanka Hon. Mangala Samaraweera Minister of Finance and Mass Media The Secretariat, Colombo – 1 Mrs.R.Ketheeswaran District Secretary/ Govt.Agent Mullaitivu Kachcheri Mrs. Ananthi Sasitharan, Minister of Women Affairs, Northern Province ஆகியோருக்கு மகயர்களும் கையளிக்கப்பட்டன இந்த மகஜரினை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் பெற்றுக்கொண்டார்.

இந்த மகயரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நுண்நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் எமது சமூகங்களை குறிப்பாக பெண்களை பாதுகாக்கவும் இந்நுண்கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் நுண்நிதி கடன் நிறுவனங்களின் செயற்பாடுகளை சமூக மேம்பாட்டு உணர்வுடன் செயற்படுத்த உடனடியான கட்டுப்பாடுகளை கொண்டு வரும் விதமாகவும் மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டியுமான பேரணியுடன் கூடிய கையெழுத்து மகஜர்

முல்லைத்தீவு மாவட்டமானது கடல் வளத்துடன் விவசாய மண்ணைப் பெற்றுள்ள மாவட்டமாகும். இருப்பினும் போரின்பின் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்து காணப்படும் மக்களிடத்தில் நுண்கடன் எனும் பெயரில் அதிக வட்டிக்குப் பணத்தினை வழங்கிரூபவ் அதன் அறவீடு முதல் அனைத்து விடயங்களாலும் பெரும்தொல்லைகள் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போது நுண்கடன் பிரச்சினை என்பது எமது மாவட்டத்தில் காணப்படும் பிரதான சவாலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நுண்நிதி செயற்பாடுகளினால் நன்மைகளை அனுபவித்து வரும் எமது சமுதாயம் அதற்கு நிகரான சவால்களை சந்தித்துக்கொண்டிருப்பதை தாங்கள் பத்திரிகையின் வாயிலாகவும் செய்திகளின் ஊடாகவும் அறிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றோம். குறிப்பாக பெண்கள் கடன் சுமைகளைத் தாங்கமுடியாமல் போகுமிடத்து தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுக்கொண்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள். அநேக கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் ஒருவரையொருவர் தங்கி வாழ்பவர்களுக்கும் தொடர்ச்சியான வருமான வழி இல்லாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் கூட இக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. போதுமான வாழ்வாதார முயற்சிகளை மேற்கொள்ள முடியாமல் அதற்கான சாதகமான கால சூழ்நிலைகளும் அற்றுப்போகும் இத்தருவாயில் அதிகளவிலான பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் வாழும் எமது மாவட்டத்தில் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல வழியில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களைப் பெற்று அவற்றை உரிய முறையில் கட்ட முடியாமல் திண்டாடுவதையும் நுண்நிதி நிறுவனங்களின் பல்வேறுபட்ட அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியால் ஓடி ஒளிந்து திரிவதையும் எம்மால் தொடர்ந்தும் காணக்கூடியதாக உள்ளது.

பத்திரிகைகளில் இவ்வாறான செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் சம்பந்தப்பட்ட அரச தரப்போ அல்லது மத்திய வங்கியோ இந்நுண்நிதி செயற்பாடுகளால் மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களைக் குறைப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் நுண்கடன் தொடர்பான பிரச்சனைகளினால் உயிரை மாய்த்துக்கொள்ளும் துயர சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்தேறியவண்ணமே உள்ளது.

நுண்நிதி நிறுவனங்கள் அதிகூடிய வட்டிஅறவிடுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் இதுவரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பான நம்பிக்கைகளை மத்திய வங்கி ஆளுநர் பல கலந்துரையாடலில் கொடுத்திருந்தாலும் அதற்கான தீர்வு எதனையும் இதுவரை பெற்றுத் தரவில்லை. இருப்பினும் கடந்த வாரம் கௌரவ நிதி அமைச்சரின் அறிவிப்பின்படி 150 000 ரூபாவிற்கு குறைந்த கடன்தொகைகளின் வட்டி குறைக்கப்படும் என்பதில் எமக்கு தெளிவின்மை காணப்படுகின்றது. ஏனெனில் இவ்வாறான சலுகைகள் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு சென்றடையுமா என்பது இங்கு கேள்விக்குறியாகவே உள்ளது.

மேற்படி எமது மக்கள் படும் துயரத்தில் பங்குபெறும் நாங்கள் இதற்கான ஒரு நிரந்தர தீர்வை அரசாங்கமும் மத்திய வங்கியும் பெற்றுத்தரவேண்டும் என்ற வேண்டுகோளோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் பெண்கள் சுய உதவிக் குழுக்கள்ரூபவ் சிவில் சமூக அமைப்புக்கள் சிவில் சமூக வலையமைப்பு அங்கத்தவர்களாகிய நாங்கள் தொடர்ந்து குரல்கொடுக்க வேண்டும் என்ற நோக்குடனும் எமது தொடர்நடவடிக்கை செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்குடனும் வட மாகாணத்தில் உள்ள சமூக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களுமாக கலந்துரையாடி மக்கள் சார்பாக அரசும் மத்திய வங்கியும் எடுக்கவேண்டிய தொடர் நடவடிக்கைகளாக பின்வரும் விடயங்களை தங்களின் உடனடியான தீர்மான நிறைவேற்றுதலுக்காக முன்வைக்கின்றோம்.

1. கடன் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் எம்மவர்களுக்கு கடனைச் செலுத்துக்கின்ற காலத்தை இரண்டு வருடங்களுக்குப் பிற்போட்டு அதற்கான வட்டியையும் ரத்துச்செய்து மீளச் செலுத்தும் வசதியினை ஏற்படுத்திக்கொடுத்தல். அத்துடன் கடனை மீளச்செலுத்துவதற்கான சரியான வருமான மூலத்தை பெற்றுக்கொள்வதற்கான பொருத்தமான ஒரு வாழ்வாதார முயற்சிக்கான வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல்.

2. கடன்களை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியாமல் வட்டிக்கு வட்டியையும் கொடுத்து எடுத்த கடன் தொகைகளுக்கு மேலாக வட்டியைக் கட்டிக்கொண்டு அவதிப்படும் மக்களின் கடன்களை உடனடியாக ரத்துச் செய்து அவர்களை இக்கடன்சுமையில் இருந்து விடுவித்தல்.

3. நுண்நிதி கடன் நிறுவனங்களின் அதிகூடிய வட்டி வீதத்தினை உடனடியாகக் குறைத்து 10% தொடக்கம் 15% வரையிலான ஆண்டு வட்டிக்கு கடன்களை வழங்க நடவடிக்கை எடுத்தல்.

4. அரச வங்கிகளுக்கு ஊடாக குறைந்த வட்டி வீதத்திற்கு கடன்களை வழங்கும் திட்டங்களை போதிய அளவு மேற்கொள்வதற்கான நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்வதன் மூலம் மக்கள் தனியார் நிதி நிறுவனங்களின் பிடியில் இருந்து விடுபட்டு தமது கடன் தேவைகளை அரச வங்கிகளினூடாகப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தல்

5. சமூக மட்டத்தில் இயங்கும் நுண்நிதி அமைப்புக்களின் (மாதர் அபிவிருத்திச் சங்கம் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் கூட்டுறவு அபிவிருத்திச் சங்கங்கள்) நுண்நிதி செயற்பாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் குறைந்த வட்டி வீதத்தில் சமூகங்களுக்குள்ளேயே கடன் பெறும் வசதியினை ஊக்கப்படுத்தல்.

மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளை முல்லைத்தீவு மாவட்ட சமூகமட்ட அங்கத்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் சார்பாக 2078 நபர்களின் கையெழுத்துக்கள் அடங்கலாக தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். அத்துடன் எமது மக்கள் இக்கடன் பொறியில் இருந்து நிரந்தரமாக விடுபடும் வரைக்கும் மக்கள் விழிப்புணர்வு தொடர்பான தொடர் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆயத்தங்களையும் மேற்கொள்கின்றோம் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.

எனவே எம்மால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான திட்டங்களையோ அல்லது அதற்கு மாற்றான வேறு திட்டங்களையோ மிகவும் விரையில் அமுல்படுத்தி எமது மக்களை இக்கடன் பிடியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இது வறுமையில் அவதிப்படும் முல்லைத்தீவு மாவட்டமக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.

நன்றி

பேரணி ஏற்பாட்டுக் குழு முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள்ரூபவ் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சிவில் சமூக வலையமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.