Take a fresh look at your lifestyle.

இராணுவ முகாம்களை அகற்ற முடியாது!

வட தமிழீத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து இப்போதைக்கு எந்தவோரு முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், அனைவரும் ஒன்றிணையும் நேரத்தில், அவை இயல்பாகவே இல்லாமல் போய்விடும் என்று  ரணில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கி உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

“வடக்கு என்பது, இலங்கையின் ஒரு பகுதி. இங்கு பயங்கரவாதம் காணப்பட்ட போதிலும், படிப்படியாகப் பயங்கரவாதம் இல்லாமல் போகும்போது, முகாம்களும் இல்லாமல் போகவேண்டும்.

வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை, 45 நாட்களுக்குள் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில், வடக்கு முதலமைச்சர், இராணுவத் தளபதி, வடக்குக் கட்டளைத் தளபதி ஆகியோரிடம் கேட்டபோது, அவர்கள் அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கவில்லையெனக் கூறினர். அவ்வாறாயின், யார் அந்த உத்தரவைப் பிறப்பித்தது? யாழ்ப்பாணத்திலுள்ள படை முகாம்களில், சீர்திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு, பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன” என்று,  இலங்கை  பிரதமர் மேலும் கூறினார்.

குறிப்பு:>