Take a fresh look at your lifestyle.

ஈரானுக்கு மிரட்டல் விடும் அமெரிக்க ?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடந்த மே மாதம் கைவிடப்பட்டதாக அறிவித்தார். இதையடுத்து இவ்விரு நாட்டு அதிபர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. தற்போது அது போராக முடியும் என்ற அச்சம் பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானி, பல்வேறு நாடுகளில் ஈரான் தூதராக இருப்பவர்களிடம் உரையாற்றினார். அப்போது கூறுகையில்,” ஈரானுடன் போரிட அமெரிக்கா நினைத்தால் அது இதுவரை நடக்காத மோசமான போராக மாறும். போருக்கெல்லாம் தாய் போராக இருக்கும். சிங்கத்தின் வாலை பிடித்து விளையாடாதீர்கள், மிஸ்டர் ட்ரம்ப். இதன் விளைவு வருத்தத்தில்தான் போய் முடியும்” என்று எச்சரித்து பேசியிருந்தார்.

ஹஸன் பேச்சு உலக அரங்கில் பலத்த அதிர்வலைகளை கிளப்பிய நிலையில், அதற்கு பதிலடியாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,” அமெரிக்காவை எக்காலத்திலும் எச்சரிக்கவோ அச்சுறுத்துவோ நினைக்காதீர்கள். அப்படி செய்தால் வரலாற்றில் பலர் அனுபவித்த பின்விளைவுகளை நீங்களும் சந்திக்க நேரும். உங்கள் புத்திதவறிய மிரட்டல் வார்த்தைகளைப் பொறுத்துக்கொள்ளும் நாடல்ல அமெரிக்கா” என்று பதிலடியாக எச்சரித்துள்ளார்.

குறிப்பு:>