Take a fresh look at your lifestyle.

தலைமன்னாரில் இருவர் கைது .!

இந்தியாவில் இருந்து வட தமிழீழத்திற்கு நுழைய முயற்சித்த குற்றச்சாட்டின் படி சிறுவன் உட்பட இருவரை இலங்கை அரசு கைது செயதுள்ளது மேலும் கைதுசெய்யப்பட்டவர்களை தலைமன்னாரில் உள்ள இராணுவ தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
நான்கு வயது சிறுவன் மற்றும் 28 வயதான நபர் ஒருவரையும் தலைமன்னார் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும் கிளிநொச்சியில் வாழ்ந்த நிலையில், போர் அனர்த்தம் காரணமாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர்களை இலங்கை காவல்துறையிடம் ஒப்படைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.