Take a fresh look at your lifestyle.

மைத்திரி பங்கேற்ற நிகழ்வில் முந்தி வந்த சீனாவின் தேசிய கீதம்!

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் இலங்கை தேசிய கீதத்திற்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அண்மையில் சனாதிபதி தலைமையில் பொலன்னறுவையில் தேசிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சிறுநீரக வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கம் உதவி வழங்குகின்றது. வைத்தியசாலை நிர்மாணப் பணிகள் ஆரம்ப நிகழ்வில் சீன மற்றும் இலங்கையின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டன. முதலில் சீன தேசிய கீதம் இசைக்கப்பட்டதாகவும், பின்னரே இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டதாகவும் கொழும்பு பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.

சனாதிபதி பங்கேற்ற நிகழ்வில், இலங்கையின் தேசிய கீதம் இரண்டாவதாக இசைக்கப்பட்டமை ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு தேசிய கீதத்திற்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படாமை குறித்து சனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.