Take a fresh look at your lifestyle.

யாழ் கோட்டை தொல்லியல் திணைக்களத்தின்கீழ் .!

வட தமிழீழம் யாழ் மாவட்டத்தில்  ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கோட்டையில் தங்கியுள்ள இராணுவம் முற்றாக வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பனர்களான மாவை சேனாதிராஜா,விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற தொல்லியல் விடையம் மீதான விவாதத்தின்போது யாழ் ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு இடம் வழங்கும் விடயம் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் உரிய அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார். யாழ் துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பின் போது பாரிய இடையூறுகளை விளைவித்த தொல்லியல் திணைக்களம் தற்போது கோட்டைக்குள் இராணுவம் முகாம் அமைப்பதை எவ்வாறு அனுமதித்தது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்களம் சார்பில் பிரசன்னமாகியிருந்த அதிகாரி,ஏற்கனவே இராணி கோட்டையில் இருபதிற்கு மேற்பட்ட இராணுத்தினர் தங்கியுள்ளதாக தெரிவித்தார். தற்போது இராணி கோட்டையினை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்வதால் ,குறித்த இரணுவத்தினர் தங்குவதற்கென சிறிய அளவான தற்காலிக கொட்டகை அமைக்கும் பணிகளே மேற்கொள்ளப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.

எனினும் கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை நாம் அனுமதிக்க முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்ததுடன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை காவல்துறையினர்  பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுடன் புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் காவல்துறையினரும்  வெளியேறி கோட்டை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின்கீழ் கொண்டுவர தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என தெரிவித்தார்.

 

குறிப்பு:>