Take a fresh look at your lifestyle.

அதிகாலையில் பேருந்து விபத்து.!

வட தமிழீழம்வவுனியா மாவட்டத்தில்  இன்று  அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே மரமொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 19 பேரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்த நிலையிலேயே விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.