Take a fresh look at your lifestyle.

ஆப்பிரிக்க – ஆசிய உறவுக்கு இந்தியா தோள் கொடுக்கும்.!

உகாண்டாவிற்கு என்னை அழைத்தது இந்திய மக்களுக்கு கிடைத்துள்ள கவுரவம் என்று இந்திய பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். பண்டைய காலத்தில் இருந்தே இந்தியாவுக்கும், உகாண்டாவுக்கும் நிறைய தொடர்பு உண்டு. உகாண்டாவில் வாழும் மக்களில் பலர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று கூறினார். தற்போது இந்திய அரசால் இங்கு காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் காந்தி பரம்பரிய மையமும் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவில் சுதந்திர போராட்டம் துவக்கத்திற்கும் ஆப்பிரிக்காவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

காந்தி வெறும் 21 ஆண்டுகள் மட்டும் ஆப்பிரிக்காவில் இல்லை எனவும், ஒத்துழையாமை இயக்கத்தையும் அவர் தலைமை ஏற்று நடத்தி உள்ளார். ஆப்பிரிக்க – ஆசிய உறவுக்கு இந்தியா தோள் கொடுக்கும். ஆப்பிரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது. இந்தியாவின் டாக்டர்களும், இன்ஜினியர்களும் வெறும் வேலைவாய்ப்புக்காக மட்டும் ஆப்ரிக்கா வரவில்லை. இரு நாடுகளிடையேயான உறவை அவர் பலப்படுத்துகிறார்கள். ஆப்ரிக்க நாடுகளுடனான இந்தியாவின் உறவு 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது என்றும் ஆப்ரிக்காவில் இந்திய நிறுவனங்கள் 54 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன என்றும் தெரிவித்தார்.