Take a fresh look at your lifestyle.

சம்மந்தன் மகிந்தவுடனும், கோத்தாவுடனும் கொஞ்சிக் குலாவியது என்ன?

 

ஶ்ரீலங்கா, முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும், முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும் பல நெருக்­க­டி­யான விட­யங்­கள் தொடர்­பான நீண்ட நேரம் கலந்­து­ரை­யா­டி­னர். அர­சி­யல் ரீதி­யான அடுத்த கட்­டச் செயற்­பா­டு­கள் தொடர்­பா­க­வும், வடக்­கின் நிலை­மை­கள், அங்கு முன்­னெ­டுப்­ப­தற்கு இருந்த செயற்­பா­டு­கள் ஏன் இப்­போது தடைப்­பட்­டுள்­ளன என்­பது தொடர்­பான விட­யங்­களை அவர்­கள் என்­னி­டம் முன்­வைத்­த­னர்.

இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

சீன மக்­கள் இரா­ணு­வத்­தின் 91ஆவது ஆண்டு விழாவை முன்­னிட்டு சீனத் தூத­ர­கம் நேற்­று­முன்­தி­னம் கொழும்­பில் ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்­வில் எதிர்க்­கட்சி தலை­வர் இரா சம்­பந்­தன் கலந்­து­கொண்­டார். அதில் மகிந்த ராஜ­பக்­ச­வும், கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர். அதன்­போதே அவர்­கள் இரா.சம்­பந்­த­னு­டன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­னர்.

தாம் மீண்­டும் ஆட்­சிக்கு வந்­த­தும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தம்­மு­டன் இணைந்து நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்ல ஆத­ர­வ­ளிக்க வேண்­டும் என்­றும், தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண முன்­வர வேண்­டும் என­வும், தாம் தமிழ் மக்­க­ளின் உரி­மை­களை, ஜன­நா­ய­கத்தை பறிக்­கும் நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என­வும் மகிந்த ராஜ­பக்ச இந்­தச் சந்­திப்­பில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

தனது ஆட்­சி­யின் போது சீனா­வி­டம் அதிக கடன்­களை பெற்று , நாட்டை கடன் சுமைக்­குள் தள்ளி விட்­ட­தாக, தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளு­டன் இணைந்து சம்­பந்­தன் குற்­றம்­சாட்­டு­கின்­றார். ஆனால் வடக்கு, கிழக்கை அபி­வி­ருத்தி செய்­யவே அதிக கடனை பெற்­றேன், இப்­போது அந்த அபி­வி­ருத்­தி­யும் தடைப்­பட்டு விட்­டது. அதைச் சுட்­டிக்­காட்ட தவ­றி­விட்­டீர்­கள் என்று நேர­டி­யாக இரா. சம்­பந்­த­னி­டம் சுட்­டிக்­காட்­டி­ய­தாக மகிந்த ராஜ­பக்ச கூறி­யுள்­ளார்.

நாம் அதி­கா­ரத்­துக்கு வந்­த­தும் தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை எங்­க­ளு­டன் பேசித் தீர்க்க தமி­ழர் தரப்பு முன்­வர வேண்­டும். எங்­க­ளு­டன் இணைந்து கூட்­ட­மைப்பு செயற்­பட வேண்­டும். வடக்கு- கிழக்கை அபி­வி­ருத்தி செய்ய வேண்­டும். அவ்­வாறு செய்­யா­மல், தமிழ் மக்­க­ளைத் தவ­றான பாதைக்கு கொண்டு சென்­றால், உங்­கள் மத்­தி­யில் வேறு புதிய அர­சி­யல் சக்­தி­கள் உரு­வா­கும் ஆபத்து ஏற்­ப­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

கொழும்பு ஊட­கம் ஒன்­றுக்­குக் கருத்­துத் தெரி­வித்­துள்ள மகிந்த ராஜ­பக்ச, எதிர்க்­கட்­சித் தலை­வ­ரை­யும், முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வை­யும் அரு­க­ருகே அமர்த்­திப் பேசி இணக்­கப்­ப­டான சூழ­லுக்கு வரும் வாய்கை ஏற்­ப­டுத்­தி­னேன் என்று கூறி­யுள்­ளார்.

எமக்கு நீண்­ட­கால பிரச்­சினை ஒன்று உள்­ளது என்­பதை நான் வலி­யு­றுத்­தி­னேன். எமக்கு அர­ச­மைப்பு ரீதி­யான தீர்வு ஒன்று வேண்­டும் என்று கூறி­னேன். தீர்­வு­களை நோக்­கிய பய­ணத்தை முன்­னெ­டுக்­கும் புதிய அர­ச­மைப்பு விட­யங்­க­ளில் அவர்­க­ளின் முழு­மை­யான பங்­க­ளிப்பை நான் அவர்­க­ளி­டம் கேட்­டுக்­கொண்­டேன். வேறு பல கார­ணி­க­ளைப் பற்­றி­யும் நாம் கலந்­து­ரை­யா­டி­னோம் என்று இந்­தச் சந்­திப்­புத் தொடர்­பாக இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார்.