Take a fresh look at your lifestyle.

சென்னையில் மாணவர்கள் இடையே   மோதல்.!

சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட  குழு  மோதலில் 4 மாணவர்களுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் இன்று மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்து மாணவர்கள் அனைவரும் வெளியே சென்று கொண்டிருந்தபோது ராயப்பேட்டை ஓய்எம்சி மைதானம் அருகே சதாம் உசேன், அகமது யாசிர், இர்பான், உசேன் ஆகிய 4 மாணவர்களை 30 பேர் கொண்ட கும்பல் கத்தியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மாணவர்கள் 4 பேரையும் காவல்துறையினர்  சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 30 பேர் கொண்ட கும்பல் மாணவர்களை தாக்கியது தொடர்பாக ஆசிப்முகமது என்பவரிடம் அண்ணாசாலை காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்தவுடன் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 4 பேரும் அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம்  காவல்துறையினர்  தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அண்ணாசாலை காவல்நிலையத்திற்கு கல்லூரி நிர்வாகிகள் சென்று காவல்துறை அதிகாரிகளிடம் பேசி வருகின்றனர். மாணவர்கள் மோதலால் கல்லூரி வளாகத்துக்கு வெளியே பலத்த  பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்  திட்டமிட்டு  நலத்திட்டம்  என்ற  பெயரில்  விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு இயற்க்கை வளம் சீர்குலைக்க படும் நேரத்தில் அரசுக்கு  எதிராக போராட வேண்டிய மாணவர்கள் ஒரே அணியில் நிற்க வேண்டிய தேவையை மறந்து   இப்படி ஒருவருக்கொருவர்    பகையாக உள்ளார்கள் , தமிழக மாணவர்களே நீங்கள் தமிழக மக்களின் உரிமையை மீட்டெடுக்கவும்     தமிழீழம் மீட்டெடுக்கவும் போராடுங்கள்  , ஒருங்கிணையுங்கள் வென்றெடுங்கள்