Take a fresh look at your lifestyle.

புனர்வாழ்வு பட்டியல் வெளியீடு.

இலங்கையில் 10 ஆண்டுகளில் 12,186 விடுதலைப்புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தகவல் வெளியிட்டுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் ஒருவர் தகவல் கோரியிருந்தார்.
எனினும், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய காரணங்களைக் காட்டி முதலில் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த தரவுகளால் தேசிய பாதுகாப்புக்கோ, தனியுரிமைக்கோ ஆபத்து ஏற்படாது என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை அடுத்தே புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் உண்மை விபரங்களை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, 2008ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடையில், 12,186 விடுதலைப் புலிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 4,156 பேர், 20 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்களில் 1,084 பேர் பெண் போராளிகள் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு:>