Take a fresh look at your lifestyle.

மாவை, விஜயகலாவிற்கு கை கொடுக்கிறாரா, காலை வாருகிறாரா?

 

வடதமிழீழம், விடு­த­லைப் புலி­க­ளின் மீள்­எ­ழுச்சி தொடர்­பில் இராஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உணர்ச்­சி­வ­சப்­பட்டே பேசி­னார். விடு­த­லைப் புலி­களை மீளு­ரு­வாக்­கும் நோக்­கம் இருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா, காவல்துறைக்கு வாக்­கு­மூ­லம் வழங்­கி­யுள்­ளார்.

இந்த மாதம் 2ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் உரை­யாற்­றி­யி­ருந்­தார். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீள் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று சாரப்­பட அவ­ரது உரை அமைந்­தி­ருந்­தது. தென்­ப­கு­தி­யில் கடும் எதிர்ப்பு எழுந்­தது. அவ­ரது இரா­ஜாங்க அமைச்­சர் பதவி பறிக்­கப்­பட்­டது. அவ­ரது உரை தொடர்­பில் விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டது.

வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்­ற­வர்­க­ளி­டம், நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமை­வாக வாக்­கு­மூ­லம் பெறப்­பட்டு வரு­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராஜா அந்த நிகழ்­வில் பங்­கேற்­றி­ருந்­த­வர் என்ற அடிப்­ப­டை­யில், மாவிட்­ட­பு­ரத்­தி­லுள்ள அவ­ரது வீட்­டுக்கு நேற்று மாலை சென்ற காவல்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் வாக்­கு­மூ­லம் பெற்­ற­னர்.

‘வட­ப­கு­தி­யில் பாலி­யல் வன்­மு­றை­கள், சிறு­வர் துர்­ந­டத்­தை­கள் காவல்துறையால் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் இத­னை­யும் பேசி­யி­ருந்­தார். பெண் என்ற முறை­யில் அந்­தச் சம்­ப­வங்­கள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று தனது கவ­லை­யை­யும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார். புலி­க­ளின் காலத்­தில் அவ்­வா­றான சம்­ப­வங்­கள் நடை­பெ­ற­வில்லை என்­றும் பேசி­யி­ருந்­தார்.

இதன்­போது காவல்துறையினர் புலி­க­ளின் கை ஓங்­கும் என்று திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்­தமை தொடர்­பில் என்­னி­டம் கேட்­டார்­கள். உணர்ச்­சி­வ­சப்­பட்டு பேசி­யி­ருந்­தார். அவ­ருக்கு தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை மீள உரு­வாக்­க­வேண்­டும் என்ற எண்­ணம் இருந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் செயற்­பா­டு­கள் தொடர்­பில் தனது உரை­யின் பின்­ப­கு­தி­யில் பெரு­ம­ளவு கூறி­யி­ருந்­தார் என்­ப­தை­யும் கால்துறையினருக்குச் சுட்­டிக்­காட்­டி­னேன்’ என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.