Take a fresh look at your lifestyle.

மிதிவெடி அகற்றியவரின்- கை சிதறியது!!

வட தமிழீழம், முகாமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வெடிப்பு நிகழ்ந்ததில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவரின் கை சிதறியது.

இந்தச் சம்பவத்தில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாரட்ன(வயது 45) என்பவரே காயமடைந்தார்.

கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணியாற்றும் குறித்த நபர் முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது மிதிவெடி வெடித்ததில் இரண்டு கைகளிலும் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்நிலையில் இடது கையில் பலத்த சிதறல் காயம் கானப்படமையினால் மணிக்கட்டுப் பகுதியில் இருந்து கை அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.