Take a fresh look at your lifestyle.

ஶ்ரீலங்கா துடுப்பாட் அணியில் வட தமிழீழ வீரர் முதலாவது இலக்கைச் சாய்த்தார்

வடதமிழீழம், யாழ் மத்திய கல்லூரி வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது முதலாவது சர்வதேச கிரிக்கெட் விக்கெட்டை நேற்று கைப்பற்றினார். இரட்டை சதத்தை நெருங்கிய இந்திய ஏ அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தைட்டை வீழ்த்தினார்.

இந்திய அணியுடனான தொடரிற்காக ஶ்ரீலங்கா ஏ அணியில் வடதமிழீழ யாழ் மத்திய கல்லூரியின் இரண்டு வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். அவர்களில் வியாஸ்காந்த் இறுதி பதினொருவர் அணியில் இடம்பிடித்தார்.

நேற்று ஆரம்பமான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதல்நாளில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 428 ஓட்டங்களை குவித்துள்ளது. ஓவருக்கு சராசரியாக 4.75ஓட்டங்கள் என, ஒருநாள் ஆட்டபாணியில் இந்தியா வெளுத்து வாங்கியது.

ஆரம்ப துடுப்பாட்டகாரர் தைட் 177 ஓட்டங்களை விளாசினார். அவரை வியாஸ்காந்த் தனது முதலாவது சர்வதேச விக்கெட்டாக வீழ்த்தினார். நேற்று 18 ஓவர்களை வீசிய அவர் 80 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் அதிகளவான நோ-போல்களை வீசினார். இலங்கை சார்பில் வீசப்பட்ட 7 நோ-போல்களையும் அவரே வீசினார். ஆனால் நேற்று இலங்கை சார்பில் வீசிய பந்துவீச்சாளர்களில் ஓவருக்கு குறைவாக ஓட்ட சராசரியை வழங்கிய வீரரும் இவர்தான்.

 

குறிப்பு:>