Take a fresh look at your lifestyle.

கனடாவில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவெழுச்சி நிகழ்வு!

35 ஆண்டுகள் மறைந்தாலும் ஆறாத வடுவாக ஆடிக் கலவரம் தமிழர்கள் மத்தியில் ஊமையின் கனவுகள் போல கடந்தாலும் 3000 க்கு மேலாக உறவுகளை பறிகொடுத்த கனத்த இதயங்களுடன் கனடாவில் நடைபெற்ற கறுப்பு  ஜூலை நினைவெழுச்சி நிகழ்வு.

கனடியத் தமிழர் தேசிய அவையால் நடத்தப்பட்ட கறுப்பு ஜூலை நினைவெழுச்சி நிகழ்வு ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் ) முன்றலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டதுடன் கனடாவின் அரசியல் கட்சிகளான கன்செர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சி, NDP கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அரசியல் பிரமுகர்கள் நேரடியாக வருகை தந்தும் தமது செய்திகளை அனுப்பியும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர்.

கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவகுமார் கலந்துகொண்டார்.

எழுச்சி உரைகள், உணர்வுப் பகிர்வுகள், கலை எழுச்சி நடனங்கள், எழுச்சிப் பாடல்கள் என அனைத்து நிகழ்வுகளும் மிகவும் உணர்வெழுச்சியூட்டுவனவாக அமைந்தன.

குறிப்பு:>