Take a fresh look at your lifestyle.

சிறுமி றெஜினா கொலை தொடர்பான வாக்குமூலம் .!

வட தமிழீழம் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் 6 வயதுச் சிறுமி றெஜினா கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருந்தார்
குறித்த சம்பவத்தில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நேற்று மல்லாகம் நீதி­வான் ஏஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணை நடைபெற்றது
கொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் உறவினர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
குறித்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இதன்போது, றெஜினாவின் தாய், தந்தை, மாமா ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன் சிறுமியின் கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகள் இனப்படுகொலை யை மூடி மறைக்கும் நீதி மன்றலில் வழங்கப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதவான் சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்தி­வைத்துள்ளார்.
.