Take a fresh look at your lifestyle.

மரண தண்டனை குறித்து ஐ.நாவில் விளக்கம் அளிக்கத் தயார்.!

மரண தண்டனை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விளக்கம் அளிக்கப்படும் என இனப்படுகொலை அரசை சேர்ந்த மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு இலங்கை எடுத்த தீர்மானம் தொடர்பில் ஜெனீவா மனித உரிமைப் பேரவைக்கு விளக்கம் அளிக்கத் தயார்.
தற்பொழுது இலங்கையில் நிலவி வரும் போதைப் பொருள் பிரச்சினையை இல்லாதொழிக்கும் நோக்கில் இனப்படுகொலையாளன் மைத்திரிபாலவும் அமைச்சர்களும் அமைச்சரவையில் மரண தண்டனை குறித்து கூட்டாக தீர்மானித்திருந்தனர்.

மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த தீர்மானம் சரியானது என பெரும்பான்மையானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் மற்றும் நீதிமன்றங்கள் மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
மரண தண்டனை அமுலாக்கம் தொடர்பில் சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு, மரண தண்டனை அமுலாக்கம் பற்றி தெளிவுபடுத்தப்படும் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.