Take a fresh look at your lifestyle.

ராஜபக்சவின் முறைகேடான வங்கி கணக்குகள் வெளியீடு.!

L
தமிழினப்படுகொலையாளன் ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களது சகாக்களின் பெயர்களில் ஹொங்கொங் மற்றும் அரபு வங்கிகளில் பேணப்பட்டு வரும் கணக்கு விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சரும், இனப்படுகொலை நிகழ்த்தும் சிங்கள அரசின் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
இந்த வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை பெற்றுக் கொள்வதற்கான ராஜதந்திர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்களில் அரபு நாடுகளில் மூன்று வங்கி கணக்குகளில் 1086 மில்லியன் அமெரிக்க டொலர் பணமும், மற்றுமொரு வங்கிக் கணக்கில் 500 மில்லியன் டொலரும் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான இனப்படுகொலைக்கு துணையாக இயங்கிய முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர் ஒருவரது கூட்டு வங்கிக் கணக்கில் 1800 மில்லியன் டொலர் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் வங்கிகளில் ராஜபக்ச குடும்பத்தினர் வைப்புச் செய்துள்ள பணம் பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன.
இந்தப் பணத்தை மீளவும் நாட்டுக்கு கொண்டு வருவது சற்றே கடினமான காரியம் என்ற போதிலும், ராஜதந்திர அணுகுமுறைகளின் மூலம் முயற்சிகள் தொடர்கின்றன என அமைச்சர் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பு:>