Take a fresh look at your lifestyle.

வடக்கில் வீட்டுத்திட்டங்களிற்கு ரணில் முடிவெடுப்பார்: ஏமாற்றப்படும் தமிழர்கள்!

வடதமிழீழம், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு,ஶ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்வு காண்பார் என அமைச்சரவைப் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சீனா மற்றும் இந்திய நிறுவனங்களுடன் பிரதமர் பேச்சு நடத்தி, அமைச்சவையில் அறிக்கை ஒன்றை சமர்பிக்கவுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளர். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

40,000 வீடுகளை அமைப்பதற்கு இந்திய நிறுவனம், கடந்த அரசாங்க காலத்தின் போது இணக்கம் தெரிவித்திருந்தநிலையில், தற்போது சீனா 1.3 மில்லியனில் வீடுகளை அமைத்துக்கொடுக்க முன்வந்துள்ளது. இந்தப் பணியை சீனாவுக்கு வழங்குவதாக இல்லை இந்தியாவுக்கு வழங்குவதாக என்பது தொடர்பில் சிக்கல் எழுந்துள்ளது எனவும் இது இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினை என்பதால் குறித்த இரு நிறுவனங்களுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

  • வடக்கிற்கு வீடமைப்பு திட்டங்களை வழங்கி மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளிற்கு சிறு விடிவைக்  கூட கொடுப்பதற்கு சிங்கள இனவாத அரசாங்கம் ஒரு போதும் விருப்பம் கொள்ளாது
  • தமிழ் மக்கள் துயரங்களுடன் வாழ்வதை சிங்கள மேலாதிக்க அரசியல் வெற்றியாக பார்ப்பதே பேரினவாத அரசுகளின் நோக்கமாகவுள்ளது

குறிப்பு:>