Take a fresh look at your lifestyle.

கறுப்பு யூலையும் கற்றுக்கொள்ளாத பாடமும்: யாழில் இன்று கலந்துரையாடல்

சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் “கறுப்பு யூலையும் கற்றுக்கொள்ளாத பாடமும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை(27.07.2018) பிற்பகல்-04 மணி முதல் இல- 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி எனும் முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

பிரபல எழுத்தாளரும், பொறியியலாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான ஐ. சாந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளரும், இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளருமான என். பிரதீபன் கருத்துரை ஆற்றவுள்ளார்.

கருத்துரையைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் அரசியல்,சமூக,விஞ்ஞான,கலை,இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பு:>