Take a fresh look at your lifestyle.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் இனப்படுகொலை இராணுவம்!

#இராணுவமயமாக்கல்

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இனப்படுகொலை இராணுவம் காலூன்றும் நடவடிக்கைகளை பல்வேறு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

தமிழர்களுடைய தமிழீழ மண் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் வேளை இவ்வாறான இராணுவமயமாக்கலும் தொடருகின்றது.

கடத்த சில நாட்களாக சிறிலங்கா இனப்படுகொலை இராணுவம் இந்துகோவிகளுக்குள் கால்பதித்துள்ளனர். அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தினர் கோவில்களை சுத்தம் செய்யும் வேலைகளில் ஈப்பட்டுள்ளனர் இவ்விரு சம்பவங்களும் கோவில் நிர்வாகிகளின் அனுமதியுடன் நடைபெற்றுள்ளது.

தமிழர் மண்ணில் சிங்களக் குடியேற்றம் இராணுவ ஆதரவோடு நடத்தப்படுகிறது. இந்து மதக் கோவில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. சிங்களவர் ஒருவர் கூட வாழாத இடத்திலும் புத்த விகாரைகள் கட்டியெழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு வடக்கு – கிழக்கை இராணுவ ஆட்சி மூலம் அடிமைப் படுத்தும் சிறிலங்கா அரசின் அடிப்படை நோக்கம் பளிச்சென்று தெரிகிறது. இன விகிதாசரத்தை மாற்றி அமைக்கும் ஆயுதமாகச் சிங்களக் குடியேற்றமும் புத்த மதக் கோவில்களும் பயன்படுத்தப் படுகின்றன.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் இனப்படுகொலை இராணுவம்
மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் இனப்படுகொலை இராணுவம்

வடக்கில் இராணுவம் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என வடக்கு மாகாண சபையும், யாழ்.நகரில் சிவில் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட கூடாது என யாழ்.மாநகர சபையும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அது கலவாதியாகிவிட்ட நிலையிலேயே இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டன.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் இனப்படுகொலை இராணுவம்
மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் இனப்படுகொலை இராணுவம்

இராணுவம் வெளியேறவேண்டும், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் ஒருபுறம் போராடிக்கொண்டு, இன்னொரு புறம் இராணுவத்தைச் தேர் இழுக்க வைக்கும் சம்பவங்களும், கோவில் துப்பரவு செய்யும் வேலைகளிலும் நடைபெறுகின்றது.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் இனப்படுகொலை இராணுவம்
மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் இனப்படுகொலை இராணுவம்


தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த 367 கோவில்கள் எரிக்கப்பட்டுவிட்டதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழில்  2012 ஆம் ஆண்டு ஆதாரத்துடன் விபரம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இலங்கையில் உள்ள, 89 தமிழ் கிராமங்களுக்கு, சிங்கள பெயர் சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றி அமைத்தல், போன்ற வேலைகளை செய்த அரசு, அங்குள்ள 367 இந்து கோவில்கள் அழித்துவிட்டது. ஒரு மாபெரும் கலாசாரமும் பழங்கால மதமும் அனைவரின் கண்முன்னே நிர்மூலமாக்கப்பட்டு வருகிறது என்பது இதன்மூலம் தெரிவந்துள்ளது.

யாழ்பாணத்தில் 208 கோவில்கள்

யாழ்பாணத்தில்தான் அதிகபட்சமாக 208 கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள நாகர்கோவில் கிழக்கு, வடக்கு, தெற்கு, செம்பியன்பட்டு வடக்கு, செம்பியன்பட்டு தெற்கு, வெட்டிலைக்கேணி, தந்தை செல்வபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பிரபலமான கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அதில் சோழசிவன் கோவில், கரம்பம் வயிரவர் கோவில், உச்சிமலை சிவன் கோவில், சுடலை ஞான வயிரவர் கோவில், மாங்கொல்லை வயிரவர் கோவில் உள்ளிட்ட பிரபல கோவில்கள் அடக்கம்.

திரிகோணமலையில் 17

தமிழர்கள் வாழும் பகுதியான திரிகோணமலை மாவட்டத்தில் உப்பரவு, லங்கபட்டிணம், சம்பல்தீவு உள்ளிட்ட பல கிராமங்களில் 17 இந்து கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன. பிள்ளையார் கோவில், முருகன் கோவில், அம்மன் கோவில், மலையம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், கோனேஸ்வர் கோவில் நாராயணன் கோவில் போன்ற ஆலயங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

மட்டக்களப்பில் 61 கோவில்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்டமுறிவு, கதிரவேலி, மலையர்கட்டு, மண்டூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் உள்ள கருணைமலைபிள்ளையார் கோவில், கன்னிகையம்மன் கோவில், சிவமுத்து மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரபலமான 61 கோவில்கள் எரிக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டுள்ளன.

அம்பாரையில் 11 கோவில்கள்

அம்பாரை மாவட்டத்தில் உள்ள நிந்தாவூர், ஆட்டப்பலம், பலமுனை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பிள்ளையார் கோவில், முருகன் கோவில், கண்ணகியம்மன் கோவில், வயிரவர் கோவில் என 11 கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

கிளிநொச்சியில் 46 கோவில்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இந்துபுரம், மாணிக்கபுரம், யூனியன் குளம், கந்தபுரம், ஜெயபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்த 46 கோவில்களை எரித்தும், இடித்தும் துவம்சம் செய்துவிட்டனர்.

முல்லைத்தீவில் 6 கோவில்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம்,பெரியகுளம், ஒட்டுசுட்டான், உள்ளிட்ட ஊர்களில் 6 கோவில்கள் இருந்த இடம் தெரியாமல் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. அவற்றில் பிள்ளையார் கோவில், தான்தோன்றீஸ்வரர் கோவில், நாகாத்தம்மன் கோவில், உள்ளிட்ட பிரபலகோவில்களும் நாசமாக்கப்பட்டுவிட்டன.

மன்னாரில் 6 கோவில்கள்

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேட்டைமுறப்பு, குறிஞ்சன்குளம், பருந்து கடந்தான், பிள்ளையார் பட்டி ஆகிய ஊர்களில் உள்ள பிரபலமான ஆலயங்களான சித்திவிநாயகர் கோவில், துர்க்கையம்மன் கோவில், வழிவிடுவிநாயகர் கோவில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட 6 கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

வவுனியாவில் 12 கோவில்கள்

வவுனியா மாவட்டத்தில் மொத்தம் 12 கோவில்கள் இடிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள ரம்பைக்குளம், மரைலுப்பை, நெடும்கேணி, சிவநகர், தடையர்மலை உள்ளிட்ட ஊர்களில் இருந்த பிள்ளையார் கோவில், முருகன் கோவில், வீரபத்திரர் கோவில், பழைய கந்தசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களை எரித்து அழித்துவிட்டனர்.

அங்குள்ள தமிழர்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். கொல்லைப்புற வழியாக, மிகப்பெரிய கலாச்சாரத்தையும், பழமை வாய்ந்த மதத்தையும் அழிக்கும் முயற்சியில், இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. 

சிறீலங்காவில் 367 கோவில்கள் எரிக்கப்பட்டுள்ளதாக International Policy Digest என்னும் சர்வதேச சஞ்சிகை மார்ச் 2012 இல் ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது .