Take a fresh look at your lifestyle.

முல்லைத்தீவில் மக்களின் விபரங்களை திரட்டும் இராணுவத்தினர்!

 

வட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு உடுப்புக்குளம்,மற்றும் உடையார்கட்டு, சுதந்திரபுரம், கைவேலி, றெட்பானா, மாணிக்கபுரம் பகுதியில் மக்கள் மற்றும் பொதுமக்கள் வைத்திருக்கும் வணிக நிலையங்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மக்களின் வீடுகளுக்கும், வணிக நிலையங்களுக்கும் செல்லும் படையினர் அங்கு குடும்பத்தலைவர் யார், எத்தனை அங்கத்தவர்கள், என்ன வேலை செய்கின்றார்கள் போன்ற விபரங்களைத் திரட்டிவருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.