Take a fresh look at your lifestyle.

வாள் வெட்டு குறைப்பதற்கான ஆலோசனையை கூறிய வடக்கிற்கான ஶ்ரீலங்காவின் ஆளுநர்!

வடதமிழீழம், தற்­போ­தைய இளை­ஞர்­கள் இணை­யத்­த­ளம், கைபே­சிப் பாவ­னை­யில் மூழ்­கி­யுள்­ள­னர். உற­வி­னர்­கள் வந்­தால்­கூட அவர்­க­ளு­டன் உரை­யா­டு­வ­தில்லை. தனி­மையை விரும்­பு­கின்­ற­னர். திரைப்­ப­டங்க­ளைப்
பார்த்து அவற்­றி­லுள்­ளது போன்று செயற்­பட விரும்­பு­கின்­ற­னர். இந்த நிலை­மையை மாற்ற சமூ­கம் முன்­வ­ர­வேண்­டும். பிள்­ளை­க­ளில் பெற்­றோர்­கள் அதிக கவ­னம் செலுத்­த­வேண்­டும்.

இவ்­வாறு வடக்கு மாகாணத்திற்கான ஶ்ரீலங்காவின் ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே தெரி­வித்­தார்.

கிளி­நொச்சி மாவட்­டத்­துக்கு நேற்று வருகை தந்த ஆளு­நர் மாவட்ட செய­ல­கத்­தில் கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­பட்­டார். அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கருத்­துத் தெரி­வித்­தார். வடக்கு மாகா­ணத்­தில் அதி­க­ரித்து வரும் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் அவ­ரி­டம் கேள்வி எழுப்­பட்­டது. அதற்­குப் பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-:

சம­யத் தலங்­க­ளில் வெறு­ம­னமே வழி­பா­டு­க­ளு­டன் நின்­று­வி­டாது நற்­பண்­பு­க­ளைப் புகட்­டு­வ­தி­லும் முன்­னிற்­க­வேண்­டும். இரவு நேரங்­க­ளில் வீடு­க­ளுக்­குள் காவல்துறையினரை அனுப்ப முடி­யாது. வீட்­டுக்கு வீடு காவல்துறையினரை காவ­லுக்கு வைக்­க­வும் முடி­யாது. இது தொடர்­பான விட­யங்­க­ளில் சமூ­கமே சிந்­தித்­துச் செயற்­பட வேண்­டும் என்று குறிப்பிட்டார்.

போதைப் பொருள் பாவனை

அமெ­ரிக்கா வல்­ல­ரசு நாடு. அங்­கும் போதைப் பொருள்­கள் அதி­க­ள­வில் காணப்­ப­டு­கின்­றது. அங்­கும் இரா­ணு­வத்­தி­னர் உள்­ள­னர். அவர்­க­ளால் அதைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. அது­போன்­று­தான் இங்­கும் படை­யி­னர், காவல்துறையினரைக் கொண்டு போதைப் பொருளை முழு­மை­யா­கக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

இந்­தியா மிக அரு­கில் உள்­ளது. அங்கு விரை­வா­கச் சென்று போதைப் பொரு­ளைப் பெற்று இங்கு கடத்­து­கின்­ற­னர் என்றும் குறிப்பிட்டார்.