Take a fresh look at your lifestyle.

மோடிஇந்தியா திரும்பினார்.!

3 நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, ருவாண்டா மற்றும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாடுகளுடன் பல்வேறு புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார். தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடந்த ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்த மோடி, தனி விமானம் மூலம் ஜோகன்னஸ்பர்க் நகரிலிந்து டெல்லி கிளம்பினார்.

இந்நிலையில் இன்று காலை, பிரதமர் நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மேலும் பல உயரதிகாரிகள் பிரதமர் மோடியை நேரில் வரவேற்றனர்.