Take a fresh look at your lifestyle.

யாழ்ப்பாணத்தில் வாள் கும்பல் அட்டகாசம், தாமதமாக சென்று படம் பிடித்த சரவணன்

வடதமிழீழம், யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் முகத்தை துணியினால் மூடிய வாள் வெட்டு கும்பலொன்று சாகவாசமாக போவோர் வருவோர் அனைவரையும் அச்சுறுத்தியது

வீதியால் சென்ற வாகனங்களையும் முகமூடி ரௌடிகள் அடித்து நொறுக்கினார்கள். மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை மடக்கிப்பிடித்து- “உயிர் வேண்டுமெனில் ஓடு எனக் கூறி, பைக் பறித்து அவரை நடையில் அனுப்பினர்.

சண்டிலிப்பாய் இரட்டையபுரம் வைரவர் கோவிலை அண்மித்த பகுதி, ஆலங்குளாய், கல்வளை, சண்டிலிப்பாய் வடக்கு போன்ற இடங்களில் நடந்தது. நேற்றிரவு 9 மணியளவில் முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி 8 மோட்டார்சைக்கிளில் வந்த பத்துக்கும் அதிகமான ரௌடிகளே இந்த அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

வாள்களுடனும் மது போதையிலும் நடமாடிய ரௌடிகளை கண்டு மக்கள் அச்சத்துடன் சிதறி ஓடினார்கள். வாகனங்களை கைவிட்டு ஓடியவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். நீண்டநேரமாக ரௌடிகள் அங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

ரௌடிகளின் அட்டகாசம் செய்துவிட்டு போன பின்னர் அங்கு வந்தார் சரவணபவன் எம்.பி. அவரது உதவியாளர்கள் அவரை பல கோணங்களிலும் புகைப்படம் எடுத்தனர். அந்தப்ப படங்கள் சம்பவ இடத்திற்கு சரவணன் உடன் விரைவு என்ற தலைப்புடன் இன்று அவரது பத்திரிகையில் வருவதற்கான வாய்ப்பு அதிமாக உள்ளது.

 

 

  • 2009 ஆம் ஆண்டுவரை மனிதப்பேய்களாக தமிழர்களின் உயிர்குடித்த சிங்கள இனவாத அரசின் இராணுவமும் கூலிக்குழுக்களும் தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் வேறு பல வடிவங்களில் தமிழ் மக்களை இனப்படுகொலையிற்கு உள்ளாக்கி வருகின்றது. முதலில் கிறீஸ் பூதங்களாகவும் பின்னர் குற்றச்செயல் புரியக்கூடிய வாள்வெட்டுக்குழு, போதைபொருள் விற்பனைக்குழு மற்றும் ஆட்கடத்தல் குழு என பல வடிவங்களில் தமிழ் மக்களை உளவியல் ரீதியில் நிம்மதியின்றி பாதுகாப்பற்ற அடிமை வாழ்வினை உணரக்கூடிய முறையில் நன்கு திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாத அரசு தனது அடக்கு முறையினை பிரயோகித்து வருகின்றது. இவ்வாறான இனவழிப்பு நிலையிலிருந்து மீளவேண்டுமானால் இதற்கான மாற்றுவழிகளை தமிழ்மக்களே சிந்தித்து நடைமுறைப்படுத்தவேண்டும்.

 

குறிப்பு:>