Take a fresh look at your lifestyle.

லெப். கேணல் கோமளா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் ஐந்து படைத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கோமளா உட்பட ஏனைய 180 மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர்.

இத் தாக்குதல் நடவடிக்கையில் 180 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.

விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்

 

தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”