Take a fresh look at your lifestyle.

வவுனியாவில் பழுதான நிலையில் வீதி விளக்குகள்.!

வட தமிழீழத்தில் வவுனியா நகரின் பல பகுதிகள் இரவு வேளைகளில் இருளில் மூழ்குவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டானீச்சூர் தொடக்கம் வேப்பங்குளம் பகுதி வரையில் இரவில் இருள் சூழ்ந்தே  உள்ளது.

வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் அவை எரியாத நிலையிலேயே காணப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகருக்குள்ளான பிரதான வீதிகள் இரவு வேளைகளில் இருளில் மூழ்குவதால் நகருக்குள் வரும் பிரயாணிகள் உட்பட பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில் அதிக வருமானமீட்டும் நகரசபையின் செயற்பாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் வவுனியா நகரசபை உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாகவே கொள்ளைச்சம்பவங்கள், வாள்வெட்டுச்சம்பவங்கள் என்பன வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துக்கும் நிலை உள்ளது எனவும் வவுனியா மக்கள்