Take a fresh look at your lifestyle.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் லம்போக் தீவில் இன்று காலை(29) 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியா பல்வேறு தீவுகள் அடங்கிய நாடாகவும், பலரின் சுற்றுலாச் செல்லும் தேர்வாகவிருக்கும் நாடு. அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் நாடாகவும் இந்தோனேசியா உள்ளது.

இந்தோனேசியாவின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான லம்போக் தீவில் இன்று காலை உள்ளூர் நிலவரப்படி 6.4 ரிக்டர் அளவில் ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் லம்போக் தீவுக்கருகே கடலில் 7 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது இந்தோனேசியாவுக்கு அருகே நடுக்கடலில் ஏற்படாத காரணத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தில் பத்துப் பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.குறித்த பகுதியிலுள்ள வீடுகள் பலவும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில கட்டிடங்கள் இடிந்துள்ளன.

இதேவேளை, நிலநடுக்கம் ஏற்பட்டு முடிவடைந்த பின்னரும் தொடர்ந்து அவ்வப்போது நில அதிர்வு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.