Take a fresh look at your lifestyle.

ஊடகங்களிற்கு எங்களை காட்டிக் கொடுத்தது யார்: விசாரணயில் இராணுவ புலனாய்வாளர்கள்

 

வடதமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தில் தாம் தகவல் திரட்டும் விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்தது யார் என ஊடகவியலாளர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , பொதுமக்கள் ஆகியோரிடம் இராணுவ புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் , உடையார் கட்டு , சுதந்திரபுரம் , கைவேலி , ரெட்பானா மற்றும் மாணிக்கபுரம், தொட்டியடி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் வீட்டில் உள்ளவர்களின் விபரங்களை விண்ணப்ப படிவம் ஒன்றின் ஊடாக பெற்றுக்கொள்கின்றனர். அத்துடன் வர்த்தக நிலையங்களின் தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் 57 ஆவது படைப்பிரிவே இந்த தகவல்களை சேகரிப்பதாக மக்கள் தெரிவித்திருந்தனர்.

அது தொடர்பிலான செய்திகள் நேற்று சனிக்கிழமை ஊடகங்களில் வெளியாகி இருந்தன. அந்நிலையில் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியது யார் என நேற்றைய தினம் முல்லைத்தீவில் உள்ள பிராந்திய ஊடகவியலாளர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னைய செய்தி

வடதமிழீழம், முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடிப்பகுதியில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படைப்பிரிவின் 2ஆவது படைப்பிரிவினர் மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக அறிவித்து மக்களிடம் இருந்து விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு தருவதாக இரண்டு நாள்களுக்கு முன்னர் படையினரால் அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றிரவு விசுவமடு தெட்டியடிப்பகுதியில் உள்ள 57 ஆவது படைப்பரிவின் 2ஆவது படைமுகாமில் தகவல் திரட்டு கொத்து படிவம் ஒன்றினை கொடுத்து பொதுமக்களிடம் இருந்தான விபரங்களை திரட்டியுள்ளனர்.

இதில் பெருமளவான மக்கள் தங்கள் விபரங்களைக் கொடுத்துள்ளதாகவும், படையினர் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.