Take a fresh look at your lifestyle.

கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய வெங்கையா நாயுடு சென்னை வருகிறார்.!

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார்.

திமுக தலைவராக 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கருணாநிதிக்கு, கடந்த சில தினங்களாக உடல் நலிவு ஏற்பட்டதையடுத்து நேற்று அதிகாலை ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு முழுநேரமும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து, காலை முதல் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், திரை பிரபலங்களும் காவேரி மருத்துவமனை சென்று, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வர் வெங்கையா நாயுடு  காவேரி மருத்துவமனைக்குச் சென்று கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12.30 மணிக்கு அவர் சென்னை வர உள்ளார்.

குறிப்பு:>