Take a fresh look at your lifestyle.

சுமந்திரனால் 5 தமிழர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாய்கிறது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய, இரண்டு தடவைகள் முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தார்கள் என்று, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஐந்து பேரைக் கைது செய்த சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இவர்கள் ஆரம்பத்தில் சாதாரண சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும், பல்வேறு காரணங்களுக்காக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் வழக்கு நடத்தப்பட்டால் அச்சுறுத்தல் காரணமாக சில சாட்சிகள், சாட்சியமளிக்க மறுப்பதாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 காராளசிங்கம் குலேந்திரன், குணசேகரலிங்கம் ராஜ்மதன், முருகையா தவேந்திரன், வேலாயுதன் விஜயகுமார், லூயிஸ் மரியநாயகம் அஜந்தன் ஆகியோர் மீதே நாளை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

குறிப்பு:>