Take a fresh look at your lifestyle.

வெளியான கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம்

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்கத் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்தார்.

திமுக தலைவர் கருணாநிதிக்குச் சிறுநீரக நோய்த் தொற்று மற்றும் இரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் அவருக்குச் சிறுநீரக நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. கருணாநிதிக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்தநிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

இந்நிலையில் தற்போது கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவருடன் நிற்கும் போது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. இதில் சுவாசக் குழாய் இணைப்பின்றி இயல்பாகவிருக்கிறார் கருணாநிதி. அவருக்கு முறையாக மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் முதன்முறையாக குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.