Take a fresh look at your lifestyle.

தமிழீழம் உட்பட பல நாடுகளில் செயலிழந்த முகநூல்.!

 

உலக புகழ்பெற்ற சமூக வலையத்தளமான முகநூல் நேற்று தமிழீழம் உட்பட பல நாடுகளில் செயலிழந்துள்ளது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள முகநூல் பயனாளர்களால் பல நிமிடங்கள் முகநூலில் நுழைய முடியாமல் போயுள்ளது.
எனினும் சில நிமிடங்களின் பின்னர் இந்த நிலைமையை சீர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டது. எனினும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொண்டதாக முகநூல் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் நிறுவனம் செயலிழந்தமை தொடர்பான முறைப்பாடு அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிலேயே பதிவாகியாகியுள்ளது.
தமிழீழமும் அதன் அண்டை நாடான இலங்கையும் இந்த நிலைமைக்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.