Take a fresh look at your lifestyle.

கடிதம் எழுதுவதில் கருனாநிதியை மிஞ்சும் தவராசா

 

வடக்கு அமைச்­ச­ரவை மீள ஒழுங்­க­மைக்­கப்­ப­டும் வரை­யில் தற்­போ­துள்ள 4 அமைச்­சர்­க­ளுக்­கும் உரிய சம்­ப­ளம், கொடுப்­ப­னவு மற்­றும் அவர்­க­ளது தனிப்­பட்ட பணி­யாள் தொகு­திக்­கான சம்­ப­ளம், கொடுப்­ப­னவு என்­ப­வற்றை வழங்­கு­வது சட்­டத்­துக்­குப் புறம்­பா­னது என்­பதை வடக்­குத் தலை­மைச் செய­ல­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்­துள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா.

இது தொடர்­பில் தலை­மைச் செய­ல­ருக்கு நேற்­றுக் அவர் கடி­தம் ஒன்­றை­யும் அனுப்பி வைத்­துள்­ளார். அதன் பிரதி கணக்­காய்­வா­ளர் திணைக்­க­ளத்­துக்­கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் ஜூன் மாதம் 29ஆம் திகதி வழங்­கிய இடைக்­கா­லக் கட்­ட­ளைக்கு அமை­வாக, அர­ச­மைப்­புக்கு ஏற்ப அமைச்­சர்­க­ளின் எண்­ணிக்­கையை வரை­யறை செய்­ய­வேண்­டிய பொறுப்பு நிய­மன அதி­கா­ரி­க­ளுக்கு உரி­யது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் ஆலோ­ச­னை­யின் அடிப்­ப­டை­யில் செயற்­ப­ட­வேண்­டி­ய­வர் வடக்கு மாகாண ஆளு­நர். ஆனால் வடக்கு அமைச்­சர்­களை இறுதி செய்­வ­தற்கு இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. நடை­மு­றை­யில் 6 அமைச்­சர்­கள் இருக்­கின்­றார்­கள்.

வடக்கு மாகாண சபை­யில் என்­னால் முன்­வைக்­கப்­பட்ட அவ­சர கோரிக்­கையை சபை ஏற்­றுக்­கொண்­டது. அமைச்­சர்­க­ளின் எண்­ணிக்­கையை சீர்­ப­டுத்­து­மாறு நிய­மன அதி­கா­ரி­க­ளைக் கோரி சபை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

எனவே, ஜி.குண­சீ­லன், க.சர்­வேஸ்­வ­ரன், திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோ­ருக்­கு­ரிய சம்­ப­ளங்­கள், இதர கொடுப்­ப­ன­வு­கள் அவர்­க­ளின் தனிப்­பட்ட பணி­யாள் தொகு­தி­யி­ன­ருக்­கான சம்­ப­ளங்­கள் என்­ப­வற்றை வழங்­கு­வது சட்­ட­மு­ர­ணா­னது என்­பதை உங்­க­ளின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரு­கின்­றேன் – என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் தெரி­வித்­துள்­ளார்.