Take a fresh look at your lifestyle.

கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மஹாபோதி அமைப்பு.!

மறைந்த, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மஹாபோதி அமைப்பின் தலைவர் உப்படிசா நாயக்க தேரர் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதுமை காரணமாக கடந்த ஏழாம் திகதி உயிரிழந்த நிலையில், மெரினாவில் அமைந்துள்ள அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார். மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள அவரது சமாதிக்கு தொண்டர்கள் பலரும் பிரபலங்களும் தொடர்ந்து வந்தபடியும் அஞ்சலி செலுத்தியபடியும் உள்ளனர்.
இந்நிலையில், மஹாபோதி அமைப்பு கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் உப்படிசா நாயக்க வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களுக்கு சேவையாற்றி வந்த தலைவரின் இழப்பு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக” தெரிவித்துள்ளார்.

 

குறிப்பு:>