Take a fresh look at your lifestyle.

சிறி ரெலோ உறுப்பினரின் சின்னதனமான வேலையால் கைது செய்யப்பட்டார்

 

சிறிடெலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் இன்று அதிகாலை வவுனியா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் பிரவேசித்து பெண் ஒருவரை அடித்து துன்புறுத்தியதாக அவருக்கு எதிராக வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 9ஆம் திகதி குருமண்காட்டில் உள்ள இரண்டு பிள்ளைகளின் தாயொருவரையே அவர் வீடு புகுந்து தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான குறித்த பெண் மீது இதற்கு முன்னரும், சந்தேக நபர் தாக்குதல் மேற்கொண்டிருந்ததாக தெரியவருகின்றது. இந்தநிலையிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற டெலோ கட்சியின் முக்கியஸ்தரான பா. உதயராசா சிறிடெலோ என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு வந்தார்

இதேவேளை, இந்தக் கட்சியின் இளைஞரணி தலைவராக செயற்பட்டு வரும் ப.கார்த்தீபன் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பு:>