Take a fresh look at your lifestyle.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 2ம் கட்ட விசாரணை.!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் விசாரணை கமிஷன் நீதிபதி அருணா ஜெகதீசன், இரண்டாம் கட்டமாக 12 பேரிடம் விசாரணை நடத்தினார். தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23ம் தேதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இவர் கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினார். துப்பாக்கி சூடு நடந்த இடங்களை ஆய்வு செய்தார். பலியானவர்கள் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். மேலும் நடந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் உள்ளிட்ட விபரங்களை பிரமாண வாக்குமூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார். இதையடுத்து தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில்,

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு அலுவலகம், விசாரணை அறை ஆகியவை அமைக்கப்பட்டது. இதன்பின், கடந்த 7ம் தேதி தூத்துக்குயில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக சில அதிகாரிகளை சந்தித்தார். நேற்று விருந்தினர் மாளிகையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் தங்கி விசாரணை நடத்தினார்.துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டி நேற்று முன்தினம் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இவர்களில் 4 பேர், ஒரு நபர் ஆணையம் விசாரணைக்கு ஆஜராயினர். அவர்களிடம் ஆணையர் அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தினார். இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து நடக்க இயலாத நிலையில், இருந்த கருணாநிதி நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவரை ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்து வந்திருந்தனர். அவர் ஸ்ட்ரெச்சரில் இருந்தபடியே ஜெகதீசனிடம் சாட்சியம் அளித்தார். கடந்த இரு நாட்களில் நீதிபதி அருணாஜெகதீசன் சம்மன் அனுப்பப்பட்டிருந்த 12 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளார்.

குறிப்பு:>