Take a fresh look at your lifestyle.

மகிந்தவும் கோத்தாவும் அதிகாரத்திற்கு வராமல் தடுப்பது எப்படி: ரணில் ஆலோசனை

 

ஶ்ரீலங்கா அரச தலை­வர் மற்­றும் நாடா­ளு­மன்றத் தேர்­தல் சட்­டங்­க­ளில் திருத்­தங்­களை மேற்­கொள்­வது தொடர்­பில் ஶ்ரீலங்கா ஜனாதிபதி   மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஶ்ரீலங்கா தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் சட்­ட­வல்­லு­ந­ரு­மான ஜயம்­பதி விக்­கிர­ம­ரட்ன ஆகி­யோர் நேற்­றுச் சந்­தித்து ஆலோ­சனை நடத்­தி­னர்.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, பாது­காப்பு அமைச்­சின் முன்­னாள் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோர் தேர்­தல்­க­ளில் போட்­டி­யி­டு­வ­தைத் தடை­செய்­யும் வகை­யில் சட்­டங்­க­ளில் திருத் தங்­க­ளைச் செய்­வது தொடர்­பில் இந்­தச் சந்­திப்­பில் ஆலோ­சிக்­கப் பட்­டுள்­ளது.

தேர்­தல் சட்­டங்­க­ளில் நிய­ம­னப் பத்­தி­ரங்­களை நிரா­க­ரிக்­கப்­ப­தற்கு சில கார­ணி­கள் பட்­டி­யல்­ப­டுத்­தப்­ப­டும். அதே­போன்று தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­குத் தகு­தி­யீ­ன­மான கார­ணங்­கள் பிறி­தா­கப் பட்­டி­யல்­ப­டுத்­தப்­ப­டும்.

இரண்டு தட­வைக்கு மேல் ஒரு­வர் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாது என்­ப­தும், இரட்­டைக் குடி­யு­ரி­மையை வைத்­தி­ருப்­ப­வர் தேர்­த­லில் போட்­டி­யிட முடி­யாது என்­ப­தும், தற்­போ­துள்ள தேர்­தல் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­கான தகு­தி­யீ­னங்­க­ளா­கவே பட்­டி­யல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவோ, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­சவோ தற்­போ­துள்ள தேர்­தல் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் வேட்­பு­ம­னுத் தாக்­கல் செய்­வ­தைத் தடுக்க முடி­யாது. அவர்­கள் தேர்­த­லில் வெற்றி பெற்ற பின்­னரே, நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்து அவர்­க­ளைப் பதவி நீக்க முடி­யும். ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்ட கீதா குமா­ர­சிங்­க­வின் வழக்­கி­லும் அதுவே நடந்­தது.
மகிந்த ராஜ­பக்ச அல்­லது கோத்­த­பாய ராஜ­பக்ச தேர்­த­லில் போட்­டி­யிட்டு ஆட்­சி­யைக் கைப்­பற்றி விட்­டார்­கள் என்­றால் அவர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்து வெற்­றி­பெ­று­வது என்­பது இய­லாத காரி­யம். இத­னைக் கருத்­தில் கொண்டே, தேர்­தல் சட்­டங்­க­ளில் திருத்­தம் மேற்­கொள்­ள­வ­தற்கு ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போ­துள்ள தேர்­தல் சட்­டங்­க­ளின் அடிப்­ப­டை­யில், வேட்­பு­ம­னுத் தாக்­கல் செய்த ஒரு மணி நேரத்­துக்­குள் ஆட்­சே­ப­னை­க­ளைத் தெரி­விக்க அவ­கா­சம் வழங்­கப்­ப­டு­கின்­றது. இந்த நேரத்­திற்­குள் நிய­ம­னப் பத்­தி­ரங்­களை நிரா­க­ரிப்­ப­தற்­கான கார­ணங்­க­ளைப் பட்­டி­ய­லி­டு­வ­தற்­குத்­தான் அனு­மதி உண்டு. தகு­தி­யீ­னங்­க­ளைப் பட்­டி­ய­லிட முடி­யாது.

புதிய திருத்­தத்­தின் மூலம் இட்­டைக்­கு­டி­யு­ரி­மை­யு­டைய ஒரு­வர் வேட்­பு­ம­னுத் தாக்­கல் செய்­தி­ருந்­தால் அந்த ஒரு மணி நேரத்­திற்­குள் அத­னைச் சுட்­டிக்­காட்ட முடி­யும். அது சரியா, தவறா என்று குடி­வ­ரவு – குடி­ய­கல்­வுத் திணைக்­க­ளம் உட­ன­டி­யா­கப் பதில் வழங்­கும். அதன் அடிப்­ப­டை­யில் தெரி­வத்­தாட்சி அலு­வ­லர் முடி­வெ­டுப்­பார்.

அதே­போன்று இரண்டு தட­வைக்கு மேல் அரச தலை­வர் தேர்­த­லில் ஒரு­வர் போட்­டி­யிட்­டால் அது தொடர்­பி­லும் ஆட்­சே­பனை எழுப்ப முடி­யும்.அதனை ஏற்­பதா இல்­லையா என்­ப­தைத் தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் தீர்­மா­னிப்­பார்.

இதற்கு ஏற்ற வகை­யில் தேர்­தல்­சட்­டத்­தில் திருத்­தங்­களை முன்­வைப்­பது தொடர்­பில் நேற்­றைய சந்­திப்­பில் ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்பு:>