Take a fresh look at your lifestyle.

மேட்டூர் அணையின் நீர்திறப்பு 60,000 கனஅடியாக அதிகரிப்பு.!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை கடந்த 8ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த உபரி நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று காலை அதிகபட்சமாக 80,000 கன அடியானது. கபினி அணை வரலாற்றில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாகர் அணையும் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், 63 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் காவிரி ஆற்றில் சுமார் ஒரு லட்சத்து 40,000 கன அடி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

மேட்டூர் அணையிலிருந்து 60,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 120 அடி உயரமுடைய மேட்டூர் அணையில் தற்போது 118.5 அடி நீர் உள்ளது. நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில், அணை பிற்பகலில் நிரம்பும் எனத் தெரிகிறது. மேட்டூர் அணை கடந்த மாதம் 23ஆம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் செல்வதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:>