Take a fresh look at your lifestyle.

கரையொதுங்கும் மருத்துவ கழிவுகள்

ஶ்ரீலங்கா, புத்தளம் கரையோர பகுதிகளில் பெருந்தொகையான மருந்துவக் கழிவு பொருள்கள் கரையொதுங்கியுள்ளது.

கடந்த மூன்று தினங்களாக இந்த மருந்துவ கழிவு பொருள்கள் கரையொதுங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரக்கணக்கான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன் பைகள், ஊசி வகைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்ட பல மருத்துவ கழிவு பொருள்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து மருத்துவ பொருள்களிலும் இந்திய அரசின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள மருத்துவ கழிவு பொருள்களினால் கடல்வளங்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.