Take a fresh look at your lifestyle.

மனிதாபிமானத்தையே உதாசீனம் செய்யும் போராட்டம்

 

 

ஶ்ரீலங்காவில் தொழிற்சங்கம் ஒன்று செய்த நியாயமற்ற பணிப் புறக்கணிப்பு என்றால் அது இந்த முறை தொடருந்துப் பணிப்புறக்கணிப்பு. சில அரசியல்வாதிகள் இந்த வேலை நிறுத்தத்தை தூண்டு விடுகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.

நேற்று (11) பெலியத்தை சிட்டினாமலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது-

இதுபோன்ற காட்டுமிராண்டி தனமான பணிப் புறக்கணிப்பு ஒன்று இதற்கு முன்னர் இடம்பெற்றதாக நான் நினைக்கவில்லை. திடீரென்று பணிப் புறக்கணிப்புச் செய்துள்ளனர்.

தொடருந்துச் சாரதிகள் மாதம் ஒன்றுக்கு பெறும் சம்பளம் வைத்தியர்கள் பெறும் சம்பளத்தை விடவும் அதிகமானது. இவற்றின் அடிப்படை நோக்கம் அரசியல் தவிர வேறொன்றுமில்லை. இவர்களுக்கு ஒட்சிசன் வழங்கி தூண்டு விடுவது அரசியல்வாதிகளே.- என்றார்.

குறிப்பு:>