Take a fresh look at your lifestyle.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்த மஹிந்த ஆதரவு; அமைச்சர் மனோ

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்னாள் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். தன்னுடன் இடம்பெற்ற பேச்சின்போதே முன்னாள் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார் என ஶ்ரீலங்காவின் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மனோ கணேசன் இதனைக் கூறினார். இதன்போது மஹிந்தவுடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பு குறித்து அமைச்சர் மனோ கணேசன் தெளிவுபடுத்தினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் மாகாண சபைச் சட்டத்தை திருத்த வேண்டுமாயின் அதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு தங்கள் 70 உறுப்பினர்களையும் கூட வாக்களிக்க வைத்து ஒத்துழைப்பு வழங்குவோம் என மஹிந்த குறிப்பிட்டார் எனவும் மனோ தெரிவித்தார்.