Take a fresh look at your lifestyle.

2 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் இளம் தம்பதியர் சிக்கினர்

மன்னாரிலிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட 2 கோடி 10 இலட்சம் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைக் கடத்திய இளம் தம்பதியர் வவுனியா செட்டிகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஶ்ரீலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரிலிருந்து கொழும்புக்குக் கடத்திச் சென்றவேளை செட்டிக்குளம் பகுதியில் வைத்துச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், போதை மாத்திரைகளும் காரும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் ஆலோசனையில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவு, செட்டிக்குளம் பகுதியில் நேற்று அதிகாலை வீதிச் சோதனை நடவடிக்கை முன்னெடுத்திருந்தது.

அதிகாலை 4.30 மணியளவில் சிறிய ரகக் காரை மறித்துச் சோதனையிட்டபோது, அதற்குள் பெருமளவு போதை மாத்திரைகள் உள்ளமை கண்டறியப்பட்டது. அதில் பயணித்த 24 வயதுடைய குடும்பத் தலைவரும் 18 வயதுடைய அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு விசாரணைணைக்குட்படுத்தப்பட்டனர்.

அவர்கள் இருவரும் களனியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, போதைப்பொருள் கடத்தும் பாதாளக் கும்பலுடன்தொடர்பு உள்ளது. மது, குணா என்ற முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்களால் டுபாயிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 70 ஆயிரம் போதைமாத்திரைகள் மன்னாருக்குக் கடல் வழியாக வந்துள்ளன.

அவற்றைக் கொழும்புக்குக் கடத்திச் செல்லும்போதே இந்தக் கைது இடம்பெற்றது. வலி நிவாரண மாத்திரையான இதனை 50 மில்லி கிராம் அளவே மருத்துவரின் அனுமதியுடன் வழங்க முடியும். ஆனால் கைப்பற்றப்பட்ட 70 ஆயிரம் மாத்திரைகளும் 200 மில்லி கிராம் அளவுடையவை.

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக அவற்றைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகநபர்பள் தெரிவித்தனர். அத்துடன், இதே மாத்திரைகள் வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் விசாரணைகளின் மூலம் தகவல் கிடைத்துள்ளன என்று பொலிஸார் மேலும் கூறினர்.

குறிப்பு:>