Take a fresh look at your lifestyle.

ஓய்வுபெற்ற தளபதிகளுடன் மைத்திரி இரகசியச் சந்திப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை, முறையாக ஆவணப்படுத்தவேண்டுமென ஆர்வம் காட்டி வரும் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பாக ஶ்ரீலங்காவின் ஓய்வுபெற்ற படைத் தளபதிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இந்தச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நடைபெற்று முடிந்த போர் தொடர்பில், ஶ்ரீலங்காவில் பல புத்தகங்கள் வெளியாகியுள்ள போதிலும், அந்தப் புத்தகங்களில் முறையாக போர் தொடர்பில் ஆவணப்படுத்தப்படவில்லை என்பதால், அதனை அரசு ஆவணப்படுத்தும் முயற்சிகளில் ஶ்ரீலங்காவின் தற்போதைய அரசு களமிறங்கியுள்ளது.

எனினும் இந்த இரகசியச் சந்திப்பில், போரில் முக்கிய பங்காற்ரிய பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முறையான வரலாறுகளை உள்ளடக்கிய போர் ஆவணமொன்று வெளிவரும் வரையில், இறுதிப் போரை ஆவணப்படுத்தும் திட்டம் தொடர்பில், இரகசியம் பேணப்படவேண்டுமென ஓய்வு பெற்ற படைத் தளபதிகளிடம் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டார் எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:>