Take a fresh look at your lifestyle.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ராஜபக்ஷ குடும்ப வேட்பாளரா? வெல்கம அதிருப்தி

ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து அடுத்து ஜனாதிபதி வேட்பாளர் வருவார் என்று மஹிந்த கூறியமை தொடர்பாக குமார் வெல்கம அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தனது சகோதரரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக மஹிந்த இந்திய ஊடகம் ஒன்றுக்குக் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, கட்சியை ராஜபக்ஷ குடும்பத்துக்கு மாத்திரம் சொந்தமாக்கிக்கொள்ள இ டமளிக்க முடியாது எனக்கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கையில் தனது சகோதரர் வேட்பாளராகலாம் என மஹிந்த தெரிவித்திருப்பதை வண்மையாகக் கண்டித்துள்ளார்.

மஹிந்தவின் குடும்ப ஆட்சிக்கு வழியேற்படுத்திக் கொடுப்பது, எதிர்காலத்தில் மீண்டுமொரு சிறிசேனவை உருவாக்குவதற்கு சமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.