Take a fresh look at your lifestyle.

அடுத்த நகர்வுக்கு தயாராகும் மஹிந்த; பங்காளித் தலைவர்களை சந்திக்கிறார்

பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் முக்கியத்துவம் மிக்க சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

செப்டெம்பர் மாதத்திற்கு உரிய இரண்டாம் வார நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முதல் நாள் பொது எதிரணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தச் சந்திப்பு முடிவடைந்த பின்னர் அன்றிரவோ அல்லது மறுநாள் காலையோ பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை மஹிந்த சந்தித்து பேசவுள்ளார்.

நல்லாட்சி அரசுக்கு எதிராக பொது எதிரணியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் எதிர்பார்க்கப்பட்ட அளவு வெற்றியளிக்காததால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது ஆழமாக ஆராயப்படவுள்ளது என அறிய முடிகின்றது. அதேவேளை, தனது இந்திய விஜயம் சம்பந்தமாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு தொடர்பாகவும் மஹிந்த இதன்போது விளக்கமளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோரே இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.