Take a fresh look at your lifestyle.

இரு பணிப்பாளர் நியமனங்கள்: போராட தயாராகும் மட்டு போதனா வைத்தியசாலை

 

தென்தமிழீழம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தற்காலிக பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வில் சென்ற பணிப்பாளர் ஒருவருக்கு மீண்டும் ஆறு மாதகால நியமனம் வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முறையற்ற வகையில் குறித்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த நியமனம் நிறுத்தப்பட்டு புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் தனது கடமையினை மேற்கொள்ள வழியேற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அரச வைத்தியர்கள் சங்கம்,தாதியர்கள் சங்கம்,சிற்றூழிர்கள் சங்கம் என்பன இணைந்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று பிற்பகல் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள்,தாதியர் சங்க பிரதிநிதிகள்,முதன்மை தாதிய சங்க பிரதிநிதிகள்,வைத்தியசாலையின் சிற்றூழியர் சங்கள பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.

வெள்ளிக்கிழமை காலை 8.00மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரையில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன் அன்று காலை 10.00மணி தொடக்கம் 12.00மணி வரையில் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.