Take a fresh look at your lifestyle.

சிறு போகத்திற்கான நீரை துருசை உடைத்து தமது பண்ணைக்கு பாய விட்ட இராணுவம்

 

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவியாற்று நீர்த்தேக்க துருசு கதவுகளை ஶ்ரீலங்கா இராணுவத்தினர் அத்துமீறி உடைத்து பயன்படுத்தியதால் விவசாயத்தை கைவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தங்கள் விவசாய செய்கைக்காக தேக்கி வைத்த நீரைவவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவியாற்று நீர்த்தேக்க துருசு கதவுகளை இராணுவத்தினர் அத்துமீறி உடைத்து பயன்படுத்தியதால் விவசாயத்தை கைவிட்டதாக தெரிவித்துள்ளார். பயன்படுத்தியதால் அருவித்தோட்டத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் தமது விவசாயத்தை கைவிட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

பாவற்குளத்திலிருந்து செட்டிகுளமூடாக பாயும் ஆறு அருவியாறு ஆகும். இதில் கிருஸ்தவகுளத்தில் அருவித்தோட்டம் எனும் இடத்தில் அணைக்கட்டொன்று அமைக்கப்பட்டு காலாகாலமாக விவசாயிகள் நெற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்முறை சிறுபோக நெற்செய்கைக்காக 25 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டது. தற்போது குடலைப்பருவத்தை அடைந்துள்ள நிலையில் மாணிக்கம் பண்ணையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற இராணுவத்தினர் துறைசார்ந்த திணைக்களங்களின் அனுமதியின்றி நீர்த்தேக்கத்தின் சுலுசுகளை உடைத்து தமக்கு தேவையான நீரை திறந்து பாய்ச்சியுள்ளார்கள். இதனால் விவசாயிகளின் 25 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.நீரின்மையால் நெல்வயல்கள் கைவிடப்பட்டு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக காட்சியளிக்கின்றது. இதுதொடர்பில் கடந்த வாரம் நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விடயத்தை வெளிக்கொணர்ந்தேன்.

இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளரினால் இராணுவத்தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனினும் நெற்செய்கை கைவிடப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விசேட நஸ்ட ஈட்டுக்கொடுப்பனவை வழங்கவேண்டுமென மாவட்ட செயலாரை கோரியுள்ளேன் என்றார்.

மா.ச.உறுப்பினர் சத்தியலிங்கம் நேற்று அருவித்தோட்டத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் விவசாயிகளையும் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.