Take a fresh look at your lifestyle.

சுமந்திரனை கழுவி ஊற்றும் சுவரொட்டிகள் முல்லைத்தீவில்

 

வடதமிழீழம், முல்லைத்தீவில் இன்று பரவலாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

குறித்த சுவரொட்டிகளில் “இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம்” என தலைப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அதில் சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.