Take a fresh look at your lifestyle.

யாழில் இருந்து கொழும்பு சென்ற அரச பஸ்ஸில் திடீர்ச் சோதனை

வவுனியா – நொச்சிமோட்டைப் பாலத்திற்கு அருகே கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நொச்சிமோட்டைப் பாலத்திற்கு அருகே நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அரச பஸ்ஸை , வவுனியாவில் வைத்து பொலிஸார் திடீர் சோதனை நடத்தினர். இதன்போது பயணப்பையில் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் இரணைமடு சந்தியிலிருந்து பஸ்ஸில் பயணித்தார் என்றும் இவரிடமிருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் நிறை மற்றும் பெறுமதி என்பவற்றைப் பின்னரே தெரிவிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக அந்த அரச பஸ் நொச்சிமோட்டைப் பாலத்தடியில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.